Whether you have years of work experience or you just graduated, there’s a job opportunity for you at Nestlé. Search for jobs here.
LACTOGROW COMFOPRO 1st Birthday Celebration
- Nestle Lanka PLC நிறுவனத்தால் (இனி 'Nestle' என குறிக்கப்படும்) Lactogrow Comfopro3 இற்காக அகில இலங்கை ரீதியில் 'மழலைச்சிரிப்பு'' முதலாவது பிறந்தநாள் எனும் பிரசாரம்( இனி பிரசாரம் என குறிக்கப்படும்) ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
- இந்த பிரசாரமானது 22 ம் திகதி மாசி மாதம் முதல் 31ம் திகதி மார்கழி மாதம் 2021 வரை செல்லுபடி ஆகும்.(இனி பிரசாரத்தின் காலவரை என குறிப்பிடப்படும்). பங்குப்பற்றுபவர்கள் குறிப்பிடப்பட்ட காலவரைக்குள் இப்பிரசாரத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் வேண்டும்.இப்பிரசாரமானது குறிப்பிடப்பட்டுளள காலவரைக்குள் மட்டுமே செல்லுபடியாகும்.
- இப்பிரசாரத்தில் தம் சுய விருப்பத்தின் அடிப்படையில் பங்குப்பற்ற முடியும்.பங்குப்பற்றுதல் கட்டாயமானது இல்லை.
- இப் பிரசாரத்தில் நெஸ்லே நிறுவன ஊழியர்கள்,அவர்களின் குடும்பத்தார், நிறுவனத்தின் இணை நிறுவனங்கள்,அதன் விளம்பரதாரர்கள் மற்றும் ஊடக நிறுவனத்தினர் தவிர்ந்த இலங்கையில் உள்ள மற்றைய அனைத்து குடிமக்களுக்கும் பங்குப்பற்ற முடியும்.
- இப்பிரசாரத்திற்கு பங்குப்பற்ற விரும்புவோர் பின்வரும் நுழைவு நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்
a. 0777 778 667 WhatsApp /Viber தொலைபேசி எண்ணிற்கு உங்கள் குழந்தைகளின் முதலாவது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட ஓர் புகைப்படத்தை உங்கள் பெயர், விலாசம், குழந்தையின் பிறந்த திகதி மற்றும் பிறப்பு சான்றிதழ் புகைப்படம், தொலைபேசி இலக்கம், அடையாள அட்டையின் புகைப்படத்தினை அனுப்பி வைக்கவும்.
b. 0777 778 667 WhatsApp /Viber தொலைபேசி எண்ணிற்கு உங்கள் குழந்தைகளின் முதலாவது பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட ஓர் புகைப்படத்தை உங்கள் பெயர், விலாசம், குழந்தையின் பிறந்த திகதி மற்றும் பிறப்பு சான்றிதழ் புகைப்படம், தொலைபேசி இலக்கம், அடையாள அட்டையின் புகைப்படத்தினை அனுப்பி வைக்கவும்.
c. தங்கள் குழந்தைகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் முதல் 100 போட்டியாளர்கள் குழந்தைகளின் பிறந்த மாதத்துக்கு அடுத்து வரும் மாதத்தில் இவ்வெகுமதியைப் பெற தகுதி பெறுவர்.
d. பங்குபற்றும் 100 பேரினதும் புகைப்படங்கள் மற்றும் தொகுப்புகள் Lactogrow Sri Lanka முகநூல் பக்கத்தில் பதிவேறற்றப்படும்.
e. இந்த நிபந்தனைகளுக்கு உட்படாத, பிரசார காலவரைக்கு பின் கிடைக்கப்பெறும் வி்ண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- பரிசு பெற்றுக்கொள்ளல் குறிப்பாக ஏதும் புகார்கள் இருந்தாலோ அல்லது வேறு ஏதும் புகார்கள் இருப்பின் நெஸ்லே லங்கா நுகர்வோர் சேவையை (0094) 011 4724724 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
- உங்கள் கவனயீனங்களினாலோ அல்லது பரிசில்கள் பெற்றுக் கொள்ள தாமதங்கள் ஏற்ப்படுவதன் நிமித்தம் மேற்கொள்ப்படும் முறையீடுகள் நிராகரிக்கப்படும்.
- பரிசுகளை பெற்றுக் கொள்ளும் இடம், திகதி வெற்றியாளர்களுக்கு அறிவிக்கப்படும்.
a. வெற்றியாளர்கள் தொடர்பாக நெஸ்லே நிறுவனத்தின் முடிவே இறுதியானது. எந்தவொரு சிபாரிசுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
b. வெற்றியாளர்களுக்கான பரிசுகள் நெஸ்லே நிறுவனத்தால் கிடைப்பனவுகளின் அடிப்படையிலே தீர்மானிக்கப்படும்.
c. நெஸ்லே நிறுவனத்தால் பரிசு பெறுவோரின் நம்பகத்தன்மை சரிபார்ப்பார்க்கப்படும்.நெஸ்லே நிறுவனம் அடிப்படை தணிக்கை தரநிலைகளை பயன்படுத்தி வெற்றிபெருவோரின் சட்டபூர்வமான தன்மையை ஆராயும்.வெற்றிபெருவோரின் சட்பூர்வமான தன்மையில் ஏதேனும் நேர்பாடுகள் இருப்பின் நெஸ்லே நிறுவனத்தால் எவ்வேளையிலும் இப்பரிசில்கள் நிராகரிக்கப்படலாம். வெற்றியாளர்களின நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட முடியாமல் போனாலோ அல்லது அவர்களை தொடர்புக்கொள்ள முடியாவிடினோ அல்லது எந்தவொரு காரணத்தாலோ பரிசுகளை உரிய காலப்பகுதியில் பெற்றுக்கொள்ளப்படமுடியாமல் போனாலோ அப்பரிசை எவ்வித முன்அறிவித்தலும் இல்லாமல் இன்னொருவருக்கு வழங்க சகல உரிமையும் நெஸ்லே நிறுவனத்துக்கு உள்ளது.
d. குறிப்பிட்ட பங்கேற்ப்பாளரை நிறுவனம் தொடர்பு கொள்ளாவிடினோ/எவ்வித தகவலும் தெரிவிக்கப்படாவிடினோ/வெற்றியாளராக அறிவிக்கப்படாவிடினோ அக்குறிப்பிட்ட நபர் தேர்வு செயன்முறையில் தேர்வு செய்யப்படவில்லை என பொருள்படும்.
e. எக்காரணத்திற்காகவும் பரிசு இன்னொருவருக்கு மாற்றப்படவோ அல்லது காசாக்கப்படவோ முடியாது.
f. இப்பிரசாரத்தில் பங்குப்பற்றுவதன் ஊடாக பங்கேற்பாளரின் பெயர்,புகைப்படம்,குரல்,நுழைவு மற்றும் ஏனைய விபரங்கள் நெஸ்லே நிறுவனத்தால் ,பிரசித்திப்படுத்தல், தொகுத்தல், காட்சிப்படுத்தல், பண்ட ஆய்வு, சந்தை ஆராய்ச்சி, விளம்பரப்படுத்தல் மற்றும் /அல்லது விற்பனை நோக்கத்திற்காக எந்தவொரு மேலதிக ஒப்புதல்,அனுமதி,இழப்பீடு அல்லது நிபந்தனையற்ற கால அறிவித்தல் இன்றி பயன்படுத்தப்படலாம்.
g. எவ்வித இழப்பீடும் நெஸ்லே நிறுவனத்தால் பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட விபரங்களை பயன்படுத்துவதற்காக வழங்கப்பட வேண்டியது இல்லை.
h. எந்தவொரு விண்ணப்பத்தையும் எவ்வித காரணம் கூறப்படாமல் நிராகரிக்கவோ அல்லது நீக்கவோ நெஸ்லே நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.நிராகரித்தல் அல்லது நீக்குதல் தொடர்பில் நெஸ்லே நிறவனம் எடுக்கும் முடிவே இறுதியானது.அம்முடிவு எவ்வித நேர்முறன்களுக்கும் எதிர் சவால்களுக்கும் உட்படுத்தப்படமாட்டாது.
i. விண்ணப்பத்தில் உள்ளடக்கப்படும் விடயம் அருவருக்கத்தக்கதாகவோ, தீங்கு விளைவிக்கக்கூடியதாகவோ, ஒழுங்கீனமற்றதாகவோ, தவறானதாகவோ, படபிரதிநிதித்துவம் அல்லது பயன்படுத்தப்பட்ட மொழி சமுதாயத்தின் எந்தவொரு குழுவுக்கு எதிரானதாகவோ, எந்தவொரு மதத்தாலும் அல்லது சட்டத்தாலும் தவிர்க்கப்பட வேண்டியதாகவோ இருக்க கூடாது.அவ்வகையான விண்ணப்பங்களையோ அல்லது விண்ணப்பதாரிகளையோ எவ்வேளையிலும் நீக்கும் உரிமை நெஸ்லேவுக்கு உள்ளது.இது தொடர்பான நெஸ்லே நிறுவனத்தின் தீர்வே இறுதியானது.
j. மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளை கடைப்பிடிக்க தவரின் குறித்த விண்ணப்பத்தை நிராகரிக்கும் சகல உரிமையும் நெஸ்லே நிறுவனத்தாருக்கு உண்டு.
k. விண்ணப்பதாரிகளால் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மூன்றாம் நபர் அறிவுசார் சொத்து உரிமைகளை மீறாத வண்ணம் அமைதல் வேண்டும்.அவ்வாறு மீறப்படின் அதற்கான முழு பொறுப்பும் விண்ணப்பதாரிகளையே சாரும்.
l. இப்பிரசாரத்தை பகுதியாகவோ அல்லது முழுதாகவோ மீளப்பெற, மாற்ற , காலந்தாழ்த்த, தடைசெய்ய , குறிபட்ட அல்லது அனைத்து நிபந்தனைகளையும் எவ்வித முன்னறிவித்தலும் இல்லாது மாற்ற நெஸ்லே நிறுவனத்தாருக்கு முழு உரிமையும் உள்ளது.அதன் நிமித்தம் ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும்/சேதத்துக்கும் நிறுவனம் எவ்வித பொறுப்பும் ஏற்காது.இது தொடர்பாகவும் அல்லது இப்பிரசாரம் தொடர்பான அனைத்து நிபந்தனைகள் தொடர்பாகவும் நெஸ்லே நிறுவனத்தின் முடிவே இறுதியானது.
m. நெஸ்லே நிறுவனம் எவ்வித இயற்கை அனார்தத்தாலும்,அரச செயற்பாட்டாலும் வேறு எவ்வித தவிர்க்கப்பட முடியாத காரணங்களாலும் ஏற்படும் இழப்புகளுக்கோ நட்டத்துக்கோ பொறுப்பு ஏற்காததோடு அவை சம்பந்தமாக எந்த ஒரு நஷ்ட ஈட்டையும் வழங்காது.
- குறிப்பிட்ட பங்கேற்பாளருக்கு இப்பிரசாரத்தில் மற்றும்/அல்லது பிரசார நிபந்தனைகளில் திருப்தி அற்ற நிலை ஏற்படின் அதற்கு பிரதான தீர்வாக இப்பிரசாரத்தில் பங்குப்பெறுதலை தவிர்க்க முடியும்.
- மேற்குறிப்பிடப்பட்ட மாதத்தின் பின்னரான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.